ஒப்பந்த சர்ச்சை தொடர்பில் நோக்கியா நிறுவனத்திற்கு அபராதம் செலுத்தும் பிளாக்பெரி

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

காப்புரிமை உரிமம் தொடர்பில் நோக்கிய மற்றும் பிளாக்பெரி நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் இவ் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அமெரிக்கா மற்றும் ஜேர்மன் நாட்டின் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் International Chamber of Commerce (ICC) ஆனது குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பினை அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் பிளாக்பெரிய நிறுவனம் நோக்கியா நிறுவனத்திற்கு அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது.

இந்த தொகையானது 137 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

குறித்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாக பிளாக்பெரி நிறுவனமும் அறிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்