இந்தியாவில் ஒரு ரூபாயில் விமானத்தில் பறக்கலாம்!

Report Print Kabilan in நிறுவனம்
105Shares
105Shares
lankasrimarket.com

இந்திய விமான சேவையில் புரட்சியை ஏற்படுத்திய விமான சேவை நிறுவனம் ஏர் டெக்கான். கடந்த 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி, இந்த நிறுவனத்தின் சேவை தொடங்கப்பட்டது.

பெங்களூரைச் சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத் என்கிற முன்னாள் ராணுவத் தலைவரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், ஒரு ரூபாய்க்கு விமான கட்டணத்தினை அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பை பெற்றது.

எனினும், பல காரணங்களால் ஏர் டெக்கான் நஷ்டத்தினை சந்தித்ததால், கடந்த 2008ஆம் ஆண்டு இதன் பங்குகளை கிங் பிஷர் நிறுவனம் வாங்கியது.

இதைத் தொடர்ந்து, ஏர் டெக்கான் நிறுவனத்தின் Logo மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், மீண்டும் கடந்த 2012ஆம் ஆண்டு இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோபிநாத் இந்நிறுவனத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.

வரும் 22ஆம் திகதியில் இருந்து, இந்த விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இதன் சேவை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

ரூ.1 பயண கட்டணத்தில், மும்பையில் இருந்து நாசிக் வரை இந்நிறுவனத்தின் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏர் டெக்கனின் நிறுவனர் கோபிநாத் கூறுகையில், ‘எளியவர்களும் மேகத்தில் பறக்கலாம்’ என்ற வாசகத்தோடு ஏர் டெக்கான் விமானம் பறக்க இருக்கிறது. புகழ்பெற்ற ஓவியர் ஆர்.கே லக்ஷ்மன் வரைந்த ஓவியம், இதில் Logoஆக பயன்படுத்தப்பட உள்ளது.

எளியவர்களும் விமானத்தில் பறக்கக்கூடிய வகையில், மத்திய அரசு உருவாக்கிய திட்டங்கள் தான் மீண்டும் இந்த சேவையை தொடங்கியதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்