ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ்ஸிற்கு கிடைத்த கௌரவம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
20Shares
20Shares
lankasrimarket.com

உலகளவில் உச்சரிக்கப்படும் நாமமாக ஆப்பிள் எனும் வார்த்தை பிரபல்யம் அடைவதற்கு அந் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ்சும் ஒரு காரணமாக விளங்குகின்றார்.

இவர் கடந்த 2011ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக மரணமடைந்துவிட்டார்.

இந்நிலையில் இவரது பெயரை பயன்படுத்துவதற்கு இத்தாலியை சேர்ந்த ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்று விரும்பியது.

இந்த நிறுவனமானது Vincenzo மற்றும் Giacomo Barbato எனும் இரு சகோதரர்களால் இயக்கப்பட்டு வருகின்றது.

இவர்களின் விருப்பம்போல ஸ்டீவ் ஜாப்ஸ்சின் பெயரை பயன்படுத்துவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந் நிறுவனம் தற்போது ரீ-சேர்ட், ஜீன்ஸ், பைகள் என்பவற்றினை வடிவமைத்து அறிமுகம் செய்கின்றது.

எதிர்காலத்தில் இலத்திரனியல் சாதனங்களையும் அறிமுகம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்