கைமாறும் ஶ்ரீலங்கன் விமான சேவை!

Report Print Nivetha in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

புதிய இடைக்கால நிர்வாக சபை ஶ்ரீலங்கன் விமான சேவையை பொறுப்பேற்க உள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சபையின் தலைவராக முதலீட்டு சபையின் முன்னாள் தலைவரான திலான் விஜேசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர் சபையின் இராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டதாக அரசாங்கம் அறிவித்தவுடன் புதிய அதிகாரிகள் செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய பணிப்பாளர் சபையிலுள்ள ஹரேந்திர கே.பால பட்டபெந்தி தவிர்ந்த ஏனைய 6 பேரும் இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்