இந்தியாவில் கூகுள் நிறுவனத்திற்கு 135 கோடி ரூபாய் அபராதம்

Report Print Kabilan in நிறுவனம்
55Shares
55Shares
lankasrimarket.com

கூகுள் தேடுதளத்தில் நிறுவனங்களுக்கு பாரபட்சம் காட்டியதாக கூகுள் நிறுவனத்திற்கு 135.86 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

‘Matrimony.com' என்ற நிறுவனத்தின் பெயரைத் தேடித் தருவதில், கூகுள் நிறுவனம் பாரபட்சம் காட்டியதாக கடந்த 2012ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், இந்திய நிறுவன போட்டி கண்காணிப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

அதன் பின்னர், அதிகமானோர் கூகுள் தேடுதளத்தை பயன்படுத்துவதை சாதகமாகக் கொண்டு கூகுள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்தது.

மேலும் இந்தியாவில் கூகுள் நிறுவனத்திற்குக் கிடைக்கும் வருவாயின் அடிப்படையில், 135 கோடியே 86 லட்சம் ரூபாயை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்