நான் தான் கணனி பேசுகிறேன்

Report Print Raju Raju in கணணி
0Shares
0Shares
lankasrimarket.com

இன்றைய உலகில் அதிமுக்கிய சாதனங்களில் முதல் இடம் வகிப்பது கணினி என்றால் அது மிகையாகாது. கணினியின்றி கிடையாது உலகு என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் அதன் பங்கு மகத்தானதாக மாறிவிட்டது.

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் இன்றைய அறிவியல் தகவல் வளர்ச்சி உலகத்தை ஒரு சிற்றூராக மாற்றிவிட்டது.

கணினி ஒரு மின்னனு சாதனமாகும். இது இயந்திர மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது. இயந்திர மொழியில் கட்டளைகள் இடப்பட்டு அது மூலமாக கணினி செயல்படுகிறது.

இன்று எல்லா துறைகளையும் ஆளும் கணினியின் வரலாறு மிக நீண்டது. சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சீனர்கள், ஜப்பானியர்கள், பெரிய எண்களை கூட்ட, பெருக்க "அபாக்கஸ்" என்ற மனிசட்டத்தை பயன்படுத்த தொடங்கினர். இதுதான் கணித செயல்முறைகளை இயக்க உதவும் முதல் சாதனமாக கருதப்படுகிறது.

முதல் எந்திர கணினி கி.பி 1623 ஆம் வருடம் வில்ஹெம் ஷிக்கார்ட் என்பவரால் கண்டுப்பிடிக்கபட்டது. இந்த கணினியானது கூட்டல், கழித்தல் கணக்குகளை ஆட்டோமேட்டிக்காக கால்குலேட் செய்ய உதவியாக இருந்தது.

பின்னர் கூட்டல், கழித்தல் கணக்குகளையும் தாண்டி இன்னும் பல விடயங்களைகையாளும் வகையில், 1823 ஆம் ஆண்டு அனலிடிக்கல் இயந்திரம் கண்டு

பிடிக்கப்பட்டது. இதை கண்டு பிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பேபேஜ் ஆவார். இவர் தான் கணினியின் தந்தை என இன்று போற்றபடுகிறார்.

பின்னர் சார்லஸ் பேப்பேஜ் 1833 ஆம் ஆண்டில் Different Engine, Analytical Engine என்ற இரு கணக்கீட்டு தத்துவங்களை வடிவமைத்தார்.

சார்லஸ் கேப்பேஜின் இத்தத்துவத்தின் அடிப்படையில் தான் மின்னனு கணினிகள் பின்னாளில் அதாவது 1940ஆம் வருட காலக்கட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டன.

பின்னர் 1946ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினி தான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி ஆகும்.

மிக பெரிய வடிவில் ஆரம்பகாலத்திருந்த கணினியானது பின்னர் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி என இன்று பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

இன்று உலகையே உள்ளங்கையில் அடக்கி ஆளும் ராட்சஷ சாதனமாக வளர்ந்து நிற்கிறது என கூறுவது பொருத்தமாக இருக்கும்.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments