மெமரி கார்டில் அழிந்து போன தகவல்களை மீட்டெடுக்க

Report Print Fathima Fathima in கணணி
0Shares
0Shares
lankasri.com

மெமரி கார்டில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் அழிந்து போனால் அதனை மீட்டெடுக்க செய்ய வேண்டிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதலில் மெமரி கார்டினை ஸ்கேன் செய்யவோ, புதிதாக படங்களை சேமித்து வைக்கவோ கூடாது.

விண்டோஸ் இயங்குதளம் கொண்ட கணணியாக இருப்பின் ரெக்குவா மென்பொருளையும், மேக் இயங்குதளம் கொண்டிருக்கும் பட்சத்தில் போட்டோரெக் மென்பொருளையும் பயன்படுத்தலாம்.

ரெக்குவா மென்பொருளை பயன்படுத்தி தரவுகள், புகைப்படங்கள், கோப்புகள், இசை வீடியோ போன்றவற்றை மீட்கலாம்.

கணனியில் இன்ஸ்டால் செய்த பின்னர், ஸ்டார்ட் செய்ய வேண்டும், நீங்கள் தொலைத்த தரவினை கொடுக்க வேண்டும்.

இதனை ரெக்குவா கண்டுபிடித்தவுடன் மெனு ஆப்ஷனை கிளிக் செய்து, கணனியில் எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.

ஒருவேளை உங்களுக்கு தேவையானது கிடைக்கவில்லை என்றால் Switch to Advanced Mode என்ற ஆப்ஷனை பயன்படுத்தவும்.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments