மைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் புதிய வடிவமைப்பு லீக் ஆகியது!

Report Print Givitharan Givitharan in கணணி
0Shares
0Shares
Cineulagam.com

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் இறுதிப் பதிப்பினை கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் அறிமுகம் செய்திருந்தது.

அதன் பின்னர் எந்தவிதமான புதிய பதிப்புக்களும் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் 10 இயங்குதளத்தின் பயனர் இடைமுகத்தினை மாற்றி மீண்டும் அறிமுகம் செய்ய மைக்ரோசொப்ட் தீர்மானித்துள்ளது.

எனினும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த தகவல் உட்பட புதிய இடைமுகத்தின் சில படங்களும் தற்போது கசிந்துள்ளன.

இவ் வருடம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் இப் புதிய பதிப்பில் அதிகளவு அனிமேஷன்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், மங்கல் தன்மை கொண்ட இயல்பும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப் புதிய வடிவமைப்பிற்கு Acrylic எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த வடிவமைப்பு தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்கிரீன் ஷாட்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments