புதிதாக HP லேப்டொப் வாங்கியவரா நீங்கள்? அப்படியாயின் இதை படிக்கவும்

Report Print Givitharan Givitharan in கணணி
0Shares
0Shares
lankasri.com

உலகின் தலை சிறந்த கணினிகளை வடிவமைத்து அறிமுகப்படுத்தும் முன்னணி நிறுவனங்களுள் HP நிறுவனமும் ஒன்றாகும்.

தற்போது இந்த நிறுவனத்திற்கும் சாம்சுங் நிறுவனத்தினைப் போன்று சோதனைக் காலம் ஏற்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

அதாவது சில மாதங்களுக்கு முன்னர் சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்த கைப்பேசிகளின் மின்கலங்கள் தொடர்ச்சியாக வெடிப்புக்குள்ளாகியிருந்தது.

இதன் காரணமாக இலட்சக்கணக்கான கைப்பேசிகளை அந் நிறுவனம் மீளப் பெற்றிருந்தது.

இதே நிலைமைதான் இப்போது HP நிறுவனத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 101,000 மின்கலங்களை மீளப் பெற்றுக்கொண்டு அவற்றுக்கு பதிலாக வேறு மின்கலங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த நிறுவனம் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விற்பனை செய்த லேப்டொப்களின் மின்கலங்களினையே இவ்வாறு மீளப் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments