தற்போதைய மடிக்கணினிகளை விடவும் 20 மடங்கு வேகமாக செயற்படும் கணினிகள்!

Report Print Givitharan Givitharan in கணணி
0Shares
0Shares
lankasrimarket.com

கடந்த நான்கு தசாப்த வரலாற்றில் இலத்திரனியல் சாதனங்களின் வேகமானது ஒவ்வொரு இரண்டு வருடங்களிலும் இரு மடங்கு வேகம் கொண்டாக உருவாக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த வேக அதிரிப்பினை தொழில்நுட்பவியலாளர்கள் Moore's Law என அழைப்பார்கள்.

இதன்படி வேக அதிகரிப்பிற்கு ஏற்றவாறு த்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கையும் இரு மடங்காக பயன்படுத்தப்படும்.

ஆனால் தற்போது மற்றுமொரு தொழில்நுட்பத்தினைப் பயன்பத்தி பன்மடங்கு வேகம் கொண்ட இலத்திரனியல் சாதனங்களை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்றது.

அதாவது ஒளியியல் தொழில்நுட்பத்தில் இயங்கும் இலத்திரனியல் சாதனங்களே அவையாகும்.

இத் தொழில்நுட்பத்தில் முதன் முறையாக கணினி தயாரிக்கப்படவுள்ளதுடன், இவ்வாறு தயாரிக்கப்படும் கணினியானது தற்போது உள்ள மடிக்கணினியின் வேகத்தை விடவும் 20 மடங்கு வேகம் கொண்டதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் என்பனவும் இத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படவுள்ளது.

எனினும் குறித்த ஒளியியல் தொழில்நுட்பத்தில் இயங்கும் முதலாவது கணினி எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments