சர்க்கரை அளவை கண்காணிக்க ஆப்பிளின் புதிய சென்சார் கருவி

Report Print Fathima Fathima in கிறியேட்டிவ்
0Shares
0Shares
lankasri.com

தொழில்நுட்ப சந்தையில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம் சர்க்கரை அளவை கண்காணிக்கும் புதிய சென்சார் கருவியை தயாரிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

இதற்காக பயோ மெடிக்கல் பொறியியல் வல்லுநர்கள் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சி குழுவினர் கூறியதாகவது, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை கண்டுபிடிக்கும் சென்சார்கள் மூலம் இன்சுலின் அளவு கண்காணிக்கப்படும்.

இந்த கருவியில் இணைக்கப்பட்ட கருவியிலிருந்து தேவைப்பட்ட இன்சுலின் ரத்தத்தில் கலக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் லட்சக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments