மலிங்காவை கழற்றிவிட்டது ஏன்?

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதில் சகலதுறை வீரரான புதுமுக வீரர் திக்ஷில டி சில்வா அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா டி20 அணியில் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த தொடரில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இழந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு தான் தயாராக இருப்பதாக மலிங்கா தெரிவித்துள்ளார்.

ஆனால் மலிங்கா இன்னும் முழு உடல் தகுதி பெறாமையே அவர் அணியில் இடம்பெறாததற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள டி20 தொடரில் மலிங்கா சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க தொடருக்கான இலங்கை டி20 அணி

 1. அஞ்சலோ மேத்யூஸ் (தலைவர்)
 2. தினேஸ் சந்திமால் (துணைத்தலைவர்)
 3. குஷால் மெண்டிஸ்
 4. தனஞ்சய டி சில்வா
 5. தனுஷ்க குணதிலக
 6. நிரோஷன் டிக்வெல்ல
 7. சீகுகே பிரசன்ன
 8. சுரங்க லக்மால்
 9. நுவான் பிரதீப்
 10. இசுறு உதான
 11. அசேல குணரத்ன
 12. சச்சித்ர பத்திரண
 13. லக்ஷான் சந்தகன்
 14. திக்ஷில டி சில்வா
 15. நுவான் குலசேகர

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments