விராட் கோஹ்லியால் முடிந்தது என்னால் முடியாதா? இங்கிலாந்து வீரர் எடுத்த சபதம்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று தொடர்களில் விளையாடி, ஒரு தொடரில் கூட வெற்றி பெறாமல் வெறும் கையை வீசிச் சென்றது.

இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் அணித்தலைவராக இருந்த அலெக்ஸ்டர் குக் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

அப்பதவி இங்கிலாந்து அணி இளம் வீரரான ஜோ ரூட்டுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பெரிய அளவில் சிறந்த திறனை வெளிப்படுத்தி தங்களது பேட்டிங்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கின்றனர். இதேபோன்று என்னாலும் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

பொறுப்புடனும், மேலும் சிறப்பாக செயல்படவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தலைவர் பதவியானது உண்மையிலேயே என்னை ஊக்குவிக்கும் விதமாகவும் சிறப்பாக செயல்பட தூண்டும் விதமாகவும் அமையும். இங்கிலாந்து அணிக்கு தலைவராக வேண்டும் என எல்லோருக்குமே கனவு இருக்கும். இதில் நிச்சயம் என்னை அடையாளப்படுத்திக் கொள்வேன் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணியின் விராட் கோஹ்லி தலைவர் பதவி ஏற்பதற்கு முன்பு தரவரிசையில் 41-வது இடத்திலேயே இருந்தார். ஆனால் அதன் பின்னர் பேட்டிங்கில் அசுர வளர்ச்சி கண்ட அவர் தரவரிசையில் தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.

இதேபால் அவுஸ்திரேலியா அணியின் தலைவராக உள்ள ஸ்டீவ் ஸ்மித்தின் வளர்ச்சியும் அபாரமாக உள்ளது. 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவரது ஓட்டங்களின் குவிப்பு சராசரி 60.15 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments