பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அபார துடுப்பாட்டம் : கலக்கிய சங்கக்காரா

Report Print Vino in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், அணியின் முன்னாள் தலைவருமான குமார் சங்கக்காரா பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு-20 போட்டியில் அசத்தி வருகின்றார்.

பி.எஸ்.எல் போட்டியில் கராச்சி அணியின் தலைவராக உள்ள குமார் சங்கக்காரா நேற்றைய போட்டியின் போது அபார துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டினார்.

அந்த வகையில் 45 பந்துகளை எதிர்கொண்டு 65 ஓட்டங்களை பெற்றார் சங்கா, அதுமட்டுமன்றி அணியின் வீரர்கள் பெற்றதில் அதிக ஓட்ட எண்ணிக்கையாக இது உள்ளது.

குறித்த ஆட்டத்தில், ஒரு சிக்ஸர் மற்றும் 8 நான்கு ஓட்டம் அடங்கலாக அந்த எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டார்.

மேலும் குறித்த போட்டியின் அந்த அணி தோல்வியை அடைந்திருந்தாலும், சங்காவின் அதிரடி ஆட்டம் எல்லோர் மனதையும் கவர்ந்தது எனலாம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments