அவுஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில அசத்தல் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கெண்ட டி20 தொடரில் இலங்கை 1-0 என முன்நிலை பெற்றுள்ளது.
மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்த 168 ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித்தலைவர் ஆரோன் பின்ச் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை எடுத்தார்.
இலங்கை தரப்பில் அணிக்கு திரும்பியுள்ள லசித் மலிங்க 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.