ஜடேஜாவின் சுழலில் சிதறிய ஸ்மித்: திகைத்த அவுஸ்திரேலிய பயிற்சியாளர்கள்

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

ராஞ்சியில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா தனது சுழலில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித்தை சொற்ப ஓட்டங்களில் வெளியேற்றி அசத்தினார்.

இந்தியா-அவுஸ்திரேலிய இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 16ம் திகதி ராஞ்சியில் தொடங்கியது. போட்டியின் கடைசி நாளான இன்று அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் தொடரந்து விளையாடி வருகிறது.

அவுஸ்திரேலிய அணி 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் அணித்தலைவர் ஸ்மித் 21 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

அப்போது, ஜடேஜா பந்து வீச பந்தை தவறாக கணித்த ஸ்மித் பேட்டை பயன்படுத்தாமல் காலால் தடுக்க முயன்றார்.

ஆனால், பந்து எதிர்ப்பாராத வகையில் ஸ்டம்பில் பட்டு விக்கெட் ஆனது. இதைக்கண்டு ஸ்மித் மட்டுமில்லாமல் அறையிலிருந்த அவுஸ்திரேலிய பயிற்சியாளர்களும் திகைத்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments