அனல் பறந்த அந்த ஒரு ஓவர்: திக்கி திணறி அவுட்டான அவுஸ்திரேலிய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ரேன்ஷா, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஓவரை எதிர்கொள்ள முடியாமல் திணறியுள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி வீரர்கள் மற்றும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் தங்கள் ஆக்ரோசத்தை வெளிப்படுத்தி விளையாடி வருகின்றனர்.

அது போன்ற ஒரு சம்பவம் தான் இன்றைய போட்டியிலும் நடந்துள்ளது. அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ரேன்ஷா, இஷாந்த் சர்மா வீசிய ஓவரை எதிர்கொண்டார்.

அப்போது இஷாந்த் சர்மா முதல் பந்தை வீசும் போது, அதை எதிர்கொள்ளாமல் ரேன்ஷா விலகிச்சென்றார். இதனால் கோபமான இஷாந்த் பந்தை விக்கெட் கீப்பரான சகாவிடம் பந்தை எறிந்தார்.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பந்தை இஷாந்த் கட்டுக்கோப்பாக வீச, ரேன்ஷா அதை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். கடைசியில் அந்த ஓவரிலே ரேன்ஷா எல்பிடபில்யூ ஆனார்.

இதனால் இஷாந்த் தன்னுடைய ஆக்ரோசத்தை அதன் மூலம் வெளிப்படுத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments