இந்திய அணியின் வெற்றியை பறித்த பந்துகள்: கோஹ்லி புலம்பல்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்ததால், ஐந்தாம் நாள் ஆட்டத்தில் எஞ்சியுள்ள 8 விக்கெட்டுகளையும் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்று விடும் என்று கருதப்பட்டது. ஆனால் போட்டி டிராவில் முடிந்தது.

போட்டி டிராவானது குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், நான்காம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தோம். இதனால் தங்களுக்கு வெற்றிக்கு நல்ல வாய்ப்பு என்றே கருதினோம். ஆனால் மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப் எங்கள் வாய்ப்பை முறியடித்தனர், இருவரும் அருமையாக ஆடினர்.

வெற்றி பெறும் நிலைக்கு சென்றோம். ஆனால் அவுஸ்திரேலியா வீரர்கள் டிரா செய்துவிட்டனர். அவர்களுக்கு பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.

போட்டி டிரா ஆனதற்கு பிட்ச் காரணமல்ல, பந்துகள்தான், அதில் ஒன்றுமே எடுக்கவில்லை. மென்மையாகி விடுகிறது. அதனால் வேகம், ஸ்பின் எதுவும் எடுக்கவில்லை. எனக்கு பந்துகள் பற்றி அதிகம் தெரியாது ஆனாலும் இந்தப் பந்து மென்மையாகி விடும் போது ஒன்றுமே எடுக்காமல் போகிறது என்று புலம்பியுள்ளார் கோஹ்லி.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments