ஐபிஎல் போட்டியில் 264 ஓட்டங்கள்: பவுலர்களை கதற விட்ட துடுப்பாட்ட வீரர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களும், பஞ்சாப் லெவன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களும் இணைந்து 264 ஓட்டங்கள் குவித்து வானவேடிக்கை நிகழ்த்தினார்.

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இரு அணியைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர்கள் சேர்ந்து மொத்தமாக 30 பவுண்டரி (120 ஓட்டங்கள்) + 24 சிக்சர்கள் (144 ஓட்டங்கள்) என ஒட்டுமொத்தமாக 264 ஓட்டங்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களிலே எடுத்தனர்.

அதுமட்டுமின்றி பஞ்சாப் அணியை மிரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் நிதிஷ் ரானா மொத்தமாக 7 சிக்ஸர்கள் விளாசினார். ஆனால் இவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் பவுண்டரிகள் அடிக்காமல், 7 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

மேலும் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி குவித்த 198 ஓட்டங்களை, மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களில் 199 ஓட்டங்கள் குவித்து அசால்ட்டாக எட்டி பிடித்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments