ஐபிஎல் போட்டியில் சொதப்பிய இலங்கை வீரர்கள்: மலிங்கா ஓவரை பிரித்து மேய்ந்த பஞ்சாப்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இந்தியாவில் நடைபெற்று வரும் பத்தாவது ஐபிஎல் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மற்றும் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் போன்றோர் சொதப்பி வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏனைய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா, ஆல்ரவுண்டர் மேத்யூஸ் மற்றும் சில வீரர்களும் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சிலர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இலங்கை அணி வீரர்களின் செயல்பாடு அந்த அளவிற்கு இல்லை.

உதாரணமாக ஐபிஎல் தொடரில் துடுப்பாட்ட வீரர்களை மிரட்டி வந்த யார்க்கர் மன்னன் மலிங்கா இந்த ஐபிஎல் தொடரில் கூறும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது 4 ஓவர்கள் வீசி 58 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

அதே போன்று மேத்யூசும் ஹைதராபாத்தின் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சிறப்பாக செயல்படவில்லை. அந்த ஆட்டத்தில் டெல்லி அணி 41 பந்துகளுக்கு 87 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

அப்போது மேத்யூஸ் களத்தில் இருந்தார். மேட்ச் வின்னரான இவர் போட்டியை எப்படியும் வெற்றி பெற வைத்துவிடுவார் என்று டெல்லி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், 23 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 31 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.

டெல்லியும் அப்போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதனால் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான இவர்கள் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சொதப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி மலிங்காவுக்கு இந்த ஐபிஎல் தொடர் தான், இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன் டிராபிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் மலிங்கா சொதப்பி வரும் நிலையில் அவருக்கு சாம்பியன் டிராபி தொடரில் பார்க்க முடியுமா என்பது கேள்விகுறி தான் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments