தவறான நடத்தை; பாகிஸ்தான் வீரர்களுக்கு 50 சதவீதம் அபராதம்

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பாகிஸ்தானில் கடந்த மாதம் இடம்பெற்ற உள்ளூர் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது தவறான நடத்தையில் ஈடுபட்ட இரண்டு வீரர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் ஆணையம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தானில் இடம்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பஞ்சாப் மாகாண அணி வீரர்களான அக்மல் மற்றும் ஜுனாய்ட் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சர்ச்சை ஏற்பட்டது.

இதுகுறித்த விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் ஆணையம், ஒழுங்கு மீறலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் மாநில அணியை சேர்ந்த அக்மல், ஜுனாய்ட் ஆகியோருக்கு போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அக்மல், ஜுனாய்ட் இருவரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments