தொடர் வெற்றிகளுக்கு கோஹ்லி பாராட்டும் இருவர்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு காரணம் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமாரின் சிறப்பான பந்து வீச்சு என அணித்தலைவர் கோஹ்லி புகழாரம் சூட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பல்வேறு இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்து வீச்சு என அனைத்து பிரிவுகளிலும் இந்திய அணி அசத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, இலங்கை அணியுடனான தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமானவர்கள் என்று குறிப்பாக இருவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இது குறித்து கோஹ்லி, 'பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் பிரமாதமாக பந்து வீசி வருகின்றனர். ஆட்டத்தின் தொடக்கத்திலும் சரி, ஆட்ட முடிவிலும் சரி, அவர்கள் பந்து வீச்சு டாப் கிளாஸாக உள்ளது. இலங்கையுடனான போட்டிக்குப் பிறகு அவர்கள் லென்த் மற்றும் துல்லியத் தன்மை அபரிமிதமாக அதிகரித்துள்ளது.

விக்கெட்டே எடுக்க முடியாத சூழ்நிலையிலும் கூட, சூப்பரான பந்து வீச்சு மூலம் அவர்கள் விக்கெட் எடுத்தனர்.' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments