டோனியின் கண் பார்வையே அனைத்திற்கும் காரணம்: கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் அரையிறுதி போட்டியில் டோனியின் பார்வையால் தான் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது என கேதர் ஜாதவ் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், வங்கதேசமும் மோதியது.

வங்கதேச வீரர்கள் தமிம் இக்பால் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் கூட்டணி அமைத்து இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தவித்த போது, கேதர் ஜாதவ் பந்துவீச அழைக்கப்பட்டார்.

இவர் முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றிக் காட்டினார்.

இதுகுறித்து ஜாதவ் கூறுகையில், என்னை பந்துவீச சொன்ன போது டோனியின் கண்களை தான் பார்த்தேன்.

அவரின் கண்கள் சொல்வதை அறிந்து பந்து வீசியதில் அது ஒர்க் அவுட் ஆனது.

இதற்கு முன்பும் நான் பந்து வீசி விக்கெட் எடுத்திருக்கிறேன் என்றாலும், இந்த ஆட்டத்தில் விக்கெட் எடுத்தது எனக்கு சிறப்பு வாய்ந்தது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments