தோற்றது அவமானமாக இருக்கிறது.. பழிவாங்க வேண்டும்: கொதித்தெழுந்த பாகிஸ்தான் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியாவை வென்று பழி தீர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் வீழ்ந்தது.

இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் வீட்டில் வைத்திருந்த டிவி போன்றவைகளை உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் கூறுகையில், லீக் போட்டியில் இந்திய அணியுடன், பாகிஸ்தான் அணி தோற்றது அவமானமாக இருக்கிறது.

இந்த தோல்விக்கு இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பழிவாங்க வேண்டும்.

இது ஒரு பென்னான வாய்ப்பு, இதை பாகிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மற்ற அணிகளைப் போன்று இந்திய அணியை எண்ணிட வேண்டாம், பலம் வாய்ந்த அணியாக உள்ளது.

இதனால் நாணய சுழற்சியில் வென்றால் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதே சிறந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments