இந்தியாவின் பந்துவீச்சை சிதறடித்த பாகிஸ்தானின் இந்த செல்லப்பிள்ளை தெரியுமா?

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல்முறையாக கோப்பையை வென்றிருக்கிறது.

பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு பஹார் ஜமானின் செஞ்சுரியும் காரணம்.

ஜமான் 3 ஓட்டங்களில் இருந்த போது பும்ராவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். ஆனால் அவர் அதிர்ஷ்டம் அது நோ-பாலானது.

இதைப் பயன்படுத்திக் கொண்ட பஹார் ஜமான், இந்திய பந்து வீச்சை சிதறடித்து தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அவர் எடுத்த ஓட்டங்கள் 114.

இவரின் இந்த அசத்தல் ஆட்டத்தால் பாகிஸ்தானின் செல்லப்பிள்ளையாகியுள்ளார். எனக்கு உடம்பு சரியில்லை, இருப்பினும் நான் நன்றாக விளையாடுவேன் என என் உள்மனதுக்குள் தோன்றியது.

அதன்படி சிறப்பாக விளையாடினேன் என கூறுகிறார். இந்த சாம்பியன்ஸ் டிராபி ஆட்டம் தான் ஜமானுக்கு முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments