International
Notification
Notification
Submit Cancel

பாகிஸ்தான் வீரர்களை பாராட்டும் கோஹ்லி

advertisement

பாகிஸ்தான் அணி வீரர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி இது என்று இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில், 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றியது.

நேற்றைய போட்டி குறித்து இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லியிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

பாகிஸ்தான் வீரர்களுக்கும், அந்நாட்டு ரசிகர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டதாகவும் கோஹ்லி கூறினார்.

இந்த வெற்றி பாகிஸ்தான் வீரர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி என்றும், யாரையும் எளிதாக எடுத்து கொள்ள கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பந்துவீச்சு குறித்து பேசிய கோஹ்லி, இன்னும் கூடுதலாக விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கலாம் என்றும், பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றும் கூறினார்.

இறுதியாக, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்த முடிவில் தவறு எதுவுமில்லை என்று கூறிய இன்றைய தினம் இந்திய அணிக்கான தினம் இல்லை என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Send Feedback
Vethu
Journalist
advertisement
advertisement