ஜடேஜாவின் செயல்: சங்ககாரா காட்டம்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com
advertisement

பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்காக ஜடேஜா ரன்அவுட் ஆகி, அவரை விளையாட அனுமதித்திருக்க வேண்டும் என சங்ககாரா கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. 339 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

advertisement

முன்னணி வீரர்கள் சீட்டுக்கட்டு போல் சரிய இந்தியா 72 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திணறியது.

7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 76 ஓட்டங்கள் குவித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

ஆட்டம் சூடுபிடித்திருந்த நிலையில் ஜடேஜா பந்தை ஆஃப் சைடு அடித்தார். எதிர்முனையில் இருந்த ஹர்திக் பாண்டியா விரைவாக ஓடி வந்துவிட்டார்.

இந்த குழப்பத்தில் பாண்டியா அவுட் ஆனார். இந்திய வீரர்கள் யாரும் இதை விரும்பவில்லை. மேலும், ஜடேஜா அடுத்த ஓவரில் ஆட்டம் இழந்தார்.

இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் கூறுகையில், இந்த ரன்அவுட் இந்தியா விரும்பவில்லை. ஜடேஜா இந்த ரன்அவுட்டில் ஒரு வீரர் போன்று செயல்பட்டிருக்கலாம். அவர் ஹர்திக் பாண்டியாவிற்காக தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments