எர்வின் 151 நாட் அவுட்: இலங்கைக்கு எதிரான டெஸ்டில் வலுவான நிலையில் ஜிம்பாப்வே

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 344 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணித்தலைவர் கிரிமர் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

advertisement

அதன் படி அந்த அணியின் மசகட்சா, ரெகிஸ் சகப்வா தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். சகப்வா 12 ஓட்டங்களிலும், மசகட்சா 12 ஓட்டங்களிலும், அடுத்து களமிறங்கிய முசகண்டா 6 ஓட்டங்களிலும் வெளியேறினார்கள்.

நான்காவது வீரராக களமிறங்கிய எர்வின் சிறப்பாக விளையாடினார். எனினும், சந்திமால் தலைமையிலான இலங்கை வீரர்கள் சிறப்பாக பந்து வீச வில்லியம் 22 ஓட்டங்களிலும், சிகந்தர் ரசா 36 ஓட்டங்களிலும், மூர் 19 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

சிறப்பாக விளையாடிய எர்வின் 60வது ஓவரில் சதம் அடித்து அசத்தினார். நிதானமாக விளையாடி வந்த வாலர் 36 ஓட்டங்களிலும், அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் கிரிமர் 13 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

முதல் ஆட்ட நேர முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்கள் எடுத்துள்ளது. எர்வின் 238 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சர் விலாசி 151 ஓட்டங்களுடனும், திரிப்பானோ 24 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை தரப்பில் ஹேரத் 4 விக்கெட்டுகளையும், குணரத்ன 2 விக்கெட்டுகளையும், பெரேரா, குமாரா தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments