1996 இலங்கை அணி உலகக்கிண்ணத்தை வென்றது..அப்போது பிக்சிங் நடத்தப்பட்டதா? இந்திய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரணதுங்கா, கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்யப்பட்டதாக கூறியிருப்பதற்கு இந்திய வீரர்கள் பதில் அளித்துள்ளனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இந்தியாவில் உள்ள மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி 6-விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரணதுங்கா கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாகவும், ஆனால் இறுதிப் போட்டியில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது கூற விரும்பவில்லை எனவும் ஒரு நாள் ஆதாரத்துடன் அதை நிரூபிப்பேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு இந்திய வீரர் காம்பீர், ரணதுங்கா போன்ற சிறந்த வீரர்கள் இது போன்று பேசுவது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது எனவும், இதைப் பற்றி பேசுவதற்கு முன்னர், அதற்கான ஆதங்களை வைத்துக் கொண்டு பேசுவது நல்லது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நெக்ரா, ரணதுங்கா இப்படி கூறியிருப்பதை நான் விமர்ச்சிக்க விரும்பவில்லை. இது போன்ற கருத்துக்களுக்கு முடிவுகள் கிடையாது.

கடந்த 1996-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் வெற்றி குறித்து இலங்கை அணிக்கு எதிராக இதே கேள்வியை என்னாலும் கேட்க முடியும். இது ஒரு சுத்த பைத்தியக்காரத்தனமாக பேச்சு என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments