மேத்யூஸ் விலகலால் வளர்ச்சி ஏற்படாது: தரங்க குறித்து கவலை வெளியிட்ட ஜயசூரிய

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இலங்கை அணித்தலைவர் பதவியிலிருந்து மேத்யூஸ் விலகியதனால் மட்டும் அணியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது என இலங்கை தேர்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், மேத்யூஸ் சிறந்த வீரர், விளையாட்டு மற்றும் அணியின் நுணுக்கங்களை அறிந்தவர்.

advertisement

அணியின் வளர்ச்சிக்கு மேத்யூஸ் மாத்திரம் காரணமாக அமைந்துவிட முடியாது, அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அதற்காக பங்களிக்க வேண்டும்.

அணியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொண்டு, அணியில் உள்ள அனைத்து வீரர்களும் உழைப்பது மிகவும் அவசியம்.

இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு புதிய அணித்தலைவராக பொறுப்பேற்றுள்ள உபுல் தரங்கவின் நிலையை நினைத்து எனக்கும் கவலை.

எனினும் அவர் அனைத்து சவால்களையும் ஏற்றுக்கொண்டு ஏனைய வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கி, தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றார், இது ஏனைய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த முன்மாதிரி.

தரங்க தனக்கு வழங்கப்பட்ட கடமையை 100 சதவிதம் சிறப்பாக செய்துள்ளார் என சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments