ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: மளமளவென விக்கெட்டுகள் சரிந்து இலங்கை திணறல்

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை 2வது நாள் முடிவில் 7 விக்கெட் இழந்து 293 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

2வது நாள் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணி 356 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜிம்பாப்வே அணியின் ஏர்வின் 160 ஓட்டங்கள் குவித்தார், இலங்கை அணியின் சார்பில் பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெட் இழந்து 293 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய திமுத் கருணாரத்ன 25 ஓட்டங்களில் வெளியேறினார், அடுத்து களமிறங்கிய மெண்டிஸ் 11 ஓட்டங்களிலும், நிதானமாக விளையாடிய உபுல் தரங்க 71 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

அடுத்து ஜோடி சேர்ந்த அணித்தலைவர் சந்திமால் மற்றும் மேத்யூஸ் நிதானமாக விளையாடினர்.

எனினும் சந்திமால் 55 ஓட்டங்களில் வெளியேற அடுத்து வந்த திக்வெல்ல 6 ஓட்டங்களில் வெளியேறினார்.

நிதானமாக விளையாடி வந்த மேத்யூஸ் 41 ஓட்டங்களிலும், பெரேரா 33 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் குணரத்ன 24 ஓட்டங்களுடனும், ஹேரத் 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஜிம்பாப்வே தரப்பில் அணித்தலைவர் கிரிமர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் மிதம் உள்ள நிலையில் இலங்கை ஜிம்பாப்வேவை விட 63 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments