மிதாலி மிரட்டல் சதம்: நியூசிலாந்துக்கு 266 ஓட்டங்கள் இலக்கு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

நியூசிலாந்து அணிக்கு எதிரான பெண்கள் உலகக் கிண்ணம் லீக் போட்டியில், இந்திய அணித்தலைவர் மிதாலி ராஜ் சதம் விளாச இந்திய அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்தில் பெண்கள் உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. டெர்பியில் இன்று நடக்கும் 27வது லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது.

இதில் நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அணித்தலைவர் மிதாலி ராஜ், 23 ஓட்டங்கள் எடுத்த போது, இந்த ஆண்டு உலகக்கிண்ண பெண்கள் கிரிக்கெட்டில் 1000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது வீராங்கனை என்ற பெருமை பெற்றார் மிதாலி ராஜ். இருப்பினும் துவக்க வீராங்கனைகளான மந்தனா (13), பூனம் ராத் (4) சொதப்பலாக வெளியேறினர்.

இந்நிலையில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 60 ஓட்டங்கள் எடுத்த போது, மழை குறுக்கிட்டதால், போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மழை நின்று சிறுது நேர தாமதத்துக்கு பின் போட்டி மீண்டும் துவங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலி, சதம் (109) அடித்து அவுட்டானார்.

இவருக்கு உறுதுணையாக விளையாடிய கிருஷ்ணமூர்த்தி (70) அரைசதம் விளாசினார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 265 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும், தோல்வியை சந்திக்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments