இலங்கை - இந்தியா கிரிக்கெட் தொடரில் யார் அசத்துவார்கள்? முரளிதரன் கருத்து

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை அணியுடன் இந்தியா விளையாடவுள்ள தொடரில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் என தான் நம்புவதாக முரளிதரன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 22ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

இதில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

போட்டியின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட முரளிதரன் கூறுகையில், இந்த தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு. இதில் சிறப்பாக செயல்பட்டால் ஐ.பி.எல். மற்றும் இந்திய அணிக்கு தெரிவு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.

வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு சென்று இந்தியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இது குறித்து பேசிய அவர், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள் அஸ்வின், ஜடேஜா சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும், 2011-ம் ஆண்டு உலக கிண்ண இறுதிப்போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்து இருக்கலாம் என்று ரணதுங்கா சொல்லி இருப்பது பற்றிய விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments