மெண்டிஸ் அபாரம்...வெற்றிப் பாதையில் இலங்கை

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி ஒரு நாள் மீதமுள்ள நிலையில் இலங்கை அணி வெற்றிக்கு 218 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

கடந்த யூலை 14ம் திகதி கொழும்பு மைதானத்தில் தொடங்கிய போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 356 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 346 ஓட்டங்கள் எடுத்தது. 10 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 252 ஓட்டங்கள் எடுத்தது.

சிகண்டர் ரசா 97 ஓட்டங்களுடனும், வெலர் 57 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணி சிகண்டர் ரசாவின் சதத்தின் உதவியுடன் அனைத் விக்கெட்டுகளையும் இழந்து 387 என்ற வலுவான ஓட்ட இலக்கை இலங்கை அணிக்கு கொடுத்துள்ளது.

2 ஆவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணியின் சிகண்டர் ரசா 127 ஓட்டங்களையும் வெல்லர் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கண ஹேரத் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

388 என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சிறப்பாக விளையாடி வரும் மெண்டீஸ் 60 ஓட்டங்களுடனும், மேத்யூஸ் 17 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை கடைசி நாள் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இலங்கையின் வெற்றிக்கு 218 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments