டி20 கிரிக்கெட்டை உருவாக்கியவன் நான்: கிறிஸ் கெயில் பெருமிதம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

டி20 போட்டிகள் தனக்காக உருவாக்கப்பட்டது என கூறுவதை விட அதை உருவாக்கியது நான் தான் என கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.

டி20 சர்வதேச போட்டிகளில் 10000 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் வசமே உள்ளது.

இதோடு கெயில் தான் முதன் முதலில் டி20 போட்டிகளில் சதம் மற்றும் அதிவேக அரைசதத்தை அடித்துள்ளார்.

கெயில் அளித்துள்ள பேட்டியில், இப்போது அதிகம் டி20 போட்டியில் தான் நாம் விளையாடுகிறோம்.

இந்த போட்டிகள் எனக்காக உருவாக்கப்பட்டது என்பதை விட டி20 போட்டியை உருவாக்கியது நான் என கூறுவது பொருத்தமாக இருக்கும். டி20 போட்டிகளில் பேட்டிங்கில் அதிகளவில் சாதிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்