உடற் தகுதி தேர்வில் கெத்து காட்டிய டோனி: 3 ஓட்டங்களை எத்தனை வினாடிகளில் பூர்த்தி செய்துள்ளார் பாருங்கள்?

Report Print Santhan in கிரிக்கெட்
742Shares
742Shares
lankasrimarket.com

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இத்தொடர் முடிந்தவுடன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க தொடர்களை உள்ளதால், இந்திய அணியின் தலைவர் கோஹ்லிக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள், டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, சுமார் 2 வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் ரெய்னா, உள்ளிட்டோர் இலங்கை ஒருநாள், டி-20 தொடரில் பங்கேற்க உள்ளனர்.

இத்தொடருக்கான உடற்தகுதி தேர்வில் டோனி, ரெய்னா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பங்கேற்றனர். இது குறித்து டோனி தன்னுடைய இன்ஸ்டிராகிராமில் எல்லா தேர்வும் முடிந்துவிட்டது. 20 மீற்றரை 2.19 வினாடிகளில் கடந்தேன்.

3 ஓட்டங்களை 8.90 வினாடிகளில் பூர்த்தி செய்தேன். தற்போது மதிய உணவுக்கான நேரம் என பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்