ஹேரத் இல்லாத இலங்கை அணி வென்றதாக சரித்திரமே இல்லை: சாதிப்பாரா சந்திமால்?

Report Print Basu in கிரிக்கெட்
334Shares
334Shares
lankasrimarket.com

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் ஓய்வை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஹேரத் இடம்பெறாத இலங்கை அணி வெற்றிப்பெற்றதாக சரித்திரமே இல்லாத நிலையில் சந்திமால் இதை முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா- இலங்கை மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் தொடங்கியுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

முன்னதாக, இலங்கை நடசத்திர சுழற்பந்து வீச்சளார் ரங்கன ஹேரத் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் ஓய்வை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஹேரத் இடம்பெறாத இலங்கை அணி வெற்றிப்பெற்றதாக சரித்திரமே இல்லை.

ஹேரத்துடன் 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ள இலங்கை அணி 21 வெற்றி, 26 தோல்வி, 14 போட்டிகளை டிரா செய்துள்ளது. அதே சமயம், ஹேரத் இல்லாமல் களமிறங்கிய 7 போட்டியில் 3 தோல்வி, 4 டிரா என ஒரு வெற்றிக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடைசி போட்டியில் இந்திய வென்றால் வரலாற்று சாதனை படைக்கும் நிலையில் இலங்கை அணித்தலைவர் சந்திமால் இல்லாமல் ஹேரத் இதை முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்