சூப்பர் மேனாக மாறிய தவானுக்கு முடிவு கட்டிய சந்திமால்: வைரல் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்
788Shares
788Shares
lankasrimarket.com

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணித்தலைவர் சந்திமால், இந்திய நட்சத்திர வீரர் தவானின் கேட்ச்சை அந்தரத்தில் பறந்து பிடித்து அசத்திய வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியா- இலங்கை மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

தற்போது வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ராகுல், தவான் ஆகியோர் இந்தியாவிற்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.

சிறப்பாக விளையாடிய தவான் 119 ஓட்டங்கள் குவித்தார், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமார ராகுல், தவான் விக்கெட் கைப்பற்றினார்.

இலங்கைக்கு கடும் சவாலாக திகழ்ந்த தவான், புஷ்பகுமார பந்தை பறக்க விட, மின்னல் வேகத்தில் வந்த பந்தை இலங்கை அணித்தலைவர் சந்திமால் அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார். தற்போது குறித்து காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்