இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சிக்சர் மழை: வரலாற்று சாதனை படைத்தார் பாண்டியா

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அதிரடி துடுப்பாட்டகாரர் ஹர்திக் பாண்டியா, இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமார வீசிய ஓவரில், முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விளாசிய பாண்டியா, அடுத்து மூன்று பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார், கடைசி பந்தில் ஓட்டங்கள் ஏதும் எடுக்கவில்லை.

இதன்மூலம் ஒரு ஓவரில் 26 ஓட்டங்களை குவித்த பாண்டியா, இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர், கபில் தேவ் ஒரு ஓவரில் 24 ஓட்டங்களை அடித்தே சாதனையாக இருந்தது. தற்போது, பாண்டியா கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.

சிறப்பாக விளையாடி வரும் பாண்டியா, இலங்கைக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து அசத்தியுள்ளார்.

சிறப்பாக விளையாடிய பாண்டியா 7 சிக்சர், 8 பவுண்டரி என 108 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி முதல் இன்னிங்கில் 487 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. தற்போது, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்