இந்தியா- இலங்கை மோதிய டி20 போட்டியில் வெடித்தது சர்ச்சை: வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கையுடனான ஒரே ஒரு டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று டெஸ்ட், ஒருநாள் தொடர்களுடன் டி20 போட்டியையும் கைப்பற்றியது.

இந்நிலையில் கொழும்பில் நடந்த டி20 போட்டியில் நாணய சுழற்சியில் தவறு நடந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாணய சுழற்சியின் போது இரு அணி தலைவர்களுடன் போட்டி வர்னணையாளரான இந்தியாவின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் மற்றும் போட்டி நடுவர் Andy Pycroft ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க நாணயத்தை சுழற்றி விட இந்திய அணித்தலைவர் கோஹ்லி ஹெட் என அழைத்தார். ஆனால், அது டெயில் என்பதை உறுதி செய்த நடுவர் Andy Pycroft இந்தியா என கூறினார்.

இதனால், குழப்பமடைந்த வர்னணையாளர் முரளி கார்த்திக், விராட் கோஹ்லி நாணய சுழற்சியில் வென்றதாக அறிவித்து கோஹ்லியின் முடிவை குறித்து கேட்டறிந்தார்.

நாணய சுழற்சியில் வென்ற கோஹ்லி பந்து வீச்சை தெரிவு செய்தார். நாணய சுழற்சியின் போது ஏற்பட்ட குழப்பதால் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.

இலங்கை முதலில் பந்து வீசியிருந்தால், போட்டியின் இரண்டாவது பாதியில் இலங்கை அணி வெற்றி இலக்கை எட்ட சிறப்பாக துடுப்பாடியிருக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்