பெண்களின் ஆடையை மட்டும் பற்றி தான் கேள்வி எழுப்புவீர்களா? மல்யுத்த வீராங்கனை

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் பெண்களின் அணித்தலைவர் மிதாலி ராஜ் வெளியிட்ட புகைப்படம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

மிதாலி ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில், லோ நெக்கில் கருப்பு நிற டிஷர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டிருந்தார்.

இதனைப்பார்த்த ரசிகர்கள், நீங்கள் என்ன ஆபாச நட்சத்திரமா? உங்கள் மீது அன்பும், மரியாதையும் வைத்திருக்கும் ரசிகர்களிடம் மிகவும் மரியாதையாக நடந்துகொள்ளுங்கள் என கருத்து தெரிவித்தனர்.

சுமார், 2 நாட்களாக இந்த புகைப்படம் குறித்து சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது, இந்நிலையில் மிதாலி ராஜ்க்கு ஆதரவாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினிஸ் போகத் குரல் கொடுத்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, எப்போது பார்த்தாலும் பெண்கள் என்ன ஆடை அணிகிறார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள், இதுபோன்ற கேள்வியை ஆண்களை பார்த்து கேட்கமாட்டார்களா? எப்போது இது மாறும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த கருத்திற்கு நபர் ஒருவர், பெண்கள் தங்கள் வரம்புகளை மறந்து விடக்கூடாது, இதுபோன்ற கருத்துக்களை உங்களுடனயே வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்