டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் படைத்த சாதனை

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

இங்கிலாந்து வீரரான ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து- மேற்கிந்திய தீவுகள் மோதிய கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிரேக் பிராத்வெயிட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் ஆண்டர்சன்.

இந்த சாதனை பட்டியலில் முதல் 5 இடங்களில் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (708 விக்கெட்), இந்தியாவின் அனில் கும்பிளே (619 விக்கெட்), அவுஸ்திரேலியாவின் கிளைன் மெக்ராத் (563 விக்கெட்), வெஸ்ட் இண்டீசின் கார்ட்னி வால்ஷ் (519 விக்கெட்) ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்