காயமடையும் இலங்கை வீரர்கள்: இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை காயத்திலிருந்து பாதுகாக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்யை அணியின் புதிய உடற்தகுதி ஆலோசகராக இங்கிலாந்தின் சசெக்ஸ் கிரிக்கெட் கழகத்தின் உடற்தகுதி மற்றும் மறுசீரமைப்பு ஆலோசகரான ரொப் சேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

advertisement

இங்கிலாந்தின் பிரபல போர்ஸ்மட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள அவர், 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சசெக்ஸ் அணியின் உடற்தகுதி ஆலோசகராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக இலங்கை அணி வீரர்களின் உடற்தகுதி தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகிறது.எனவே, இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் அணி வீரர்களின் உடற்தகுதியை அதிகரிக்கும் நோக்கிலும், தொடர் காயத்திலிருந்து வீரர்களை பாதுகாக்கும் நோக்கிலும் ரொப் சேவ்வை இலங்கை அணியின் புதிய உடற்தகுதி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்