கோஹ்லி மட்டுமே எங்கள் இலக்கு: அவுஸ்திரேலிய தலைவர் பேட்டி

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லியை கட்டுப்படுத்துவதே எங்கள் இலக்கு என அவுஸ்திரேலிய அணி தலைவர் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

முதல் போட்டி வரும் 17-ஆம் திகதி தொடங்கவுள்ளது.

போட்டி குறித்து அவுஸ்திரேலியா தலைவர் ஸ்டீவன் சுமித் கூறுகையில், இந்த போட்டியில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லியை கட்டுப்படுத்துவதே எங்கள் நோக்கம்.

சிறந்த வீரரான அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்த தொடரில் கோஹ்லியை அதிகமான ஓட்டங்கள் குவிப்பதிலிருந்து தடுக்க முடியும் என நினைக்கிறேன்.

இதை நாங்கள் சரியாக செய்தால் சில வெற்றிகளை பெற வாய்ப்பிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக மோதுவது எப்போதும் கடினமானது தான் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்