டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் யார்?

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 896 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

advertisement

இந்தியாவின் ஜடேஜா 884 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், அஸ்வின் 852 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 809 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்து அணியின் ரூட் இரண்டாமிடத்திலும், நியூசிலாந்தின் வில்லியம்சன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதலிடத்திலும், இந்தியாவின் ஜடேஜா இரண்டாமிடத்திலும், அஸ்வின் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

சிறந்த அணிகள் தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா இரண்டாமிடத்திலும், இங்கிலாந்து மூன்றாமிடத்திலும் உள்ளது.

பட்டியலில் இலங்கை அணிக்கு ஏழாவது இடம் கிடைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்