பாகிஸ்தானுடன் மோதும் உலக XI அணியில் இலங்கை நட்சத்திர வீரர்

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உலக XI அணி லாகூர் நகருக்கு வந்தடைந்துள்ளது.

பாகிஸ்தான் வந்தடைந்த உலக XI அணியினரை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

advertisement

ஹசீம் அம்லா , டேவிட் மிலர் , ஜோர்ஜ் பெய்லி, டேரன் சமி மற்றும் பென் கடின் உள்ளிட்ட சர்வதேச வீரர்களுடனான இந்த அணியில் இலங்கை அணியின் திசர பெரேராவும் இடம்பிடித்துள்ளார்.

ஜிம்பாப்பே அணியின் முன்னாள் தலைவர் என்டி ப்ளவர் உலக XI அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டுவருகிறார். எதிர்வரும் 12, 13 மற்றும் 15ம் திகதிகளில் இந்த அணி பாகிஸ்தானுடன் மூன்று டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

பாகிஸ்தானுடன் மோதவுள்ள உலக XI அணி விபரம்: டூ பிளேசிஸ்(அணித்தலைவர்), ஹசிம் அம்லா, ஜோர்ஜ் பெய்லி, கோலிங்வுட், பென் கட்டிங், கிராண்ட் எலியட், தமீம் இக்பால், டேவிட் மில்லர், மோனி மோர்கெல், டிம் பெயின், திசர பெரேரா, டேரன் சாமி, இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்