இந்திய அணி பயமுறுத்தும் விதத்தில் உள்ளது: அவுஸ்திரேலிய வீரர் ஓபன் டாக்

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணியின் சிறப்பான துடுப்பாட்ட வரிசையை பார்த்தால் தான் கொஞ்சம் பயமா இருக்கு என அவுஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் 17ல் சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய லெவன் அணியை அவுஸ்திரேலிய அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதுகுறித்து அவுஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் கூறியதாவது, இந்திய அணிக்கு எதிரான தொடரில் அதிக ஓட்டங்கள் சேர்க்க வேண்டியது அவசியம்.

அதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வரிசை மிகவும் பயமுறுத்தும் விதத்தில் உள்ளது. அந்த அணியின் எந்த வீரர் எப்போது கொந்தளிப்பார் என கணிக்க முடியாது. ரோகித் வெளியேறினால் கோஹ்லி, கோஹ்லி வெளியேறினால் டோனி என வரிசை மிகவும் பலமாக உள்ளது என தெரிவித்துள்ளாளர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்