டோனியிடம் காப்பி புக் ஸ்டைல் கிடையாது..நான் கண்டதில்லை: இலங்கை வீரர் புகழாரம்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரை இந்திய அணி வெற்றிகரமாக கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து இந்திய அணி, தற்போது அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அட்டப்பட்டு, டோனியைப் போன்ற ஒரு சிறந்த பினிஷரை கடந்த கால் நூற்றாண்டில் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், டோனி தங்களுக்கு எதிராக ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில் 183 ஓட்டங்கள் எடுத்தார். அவரிடம் கிரிக்கெட் காப்பி புக் ஸ்டைல் கிடையாது. இதற்கும் மேலாக ஒரு போட்டியை கணிப்பது என்பதில் உலகில் அவருக்கு நிகர் யாரும் இல்லை.

அவர் சூழ்நிலைக்கேற்ப ரிஸ்க் எடுத்து ஆடக்கூடியவர். கடந்த 25 ஆண்டுகளில் நான் பார்த்த வரையில் அவரைப்போல ஒரு பினிஷர் கிடையாது என்றே கூறுவேண்.

ஜாவேத் மியாண்டட், மைக்கேல் பெவன், அர்ஜுனா ரணதுங்கா ஆகியோரை நாம் குறிப்பிடலாம் ஆனால் இப்போது அவர் உள்ள இடம், அதுவும் காப்பு புக் துடுப்பாட்டம் உத்தி இல்லாமல் இத்தகைய உயர்வான இடத்துக்கு வந்துள்ளது பெரிய நிகழ்வு தான் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்