சிக்சர் விளாசுவதில் இந்திய வீரர் நிகழ்த்தியுள்ள உலக சாதனை

Report Print Raju Raju in கிரிக்கெட்
611Shares
611Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஒரு சிக்சர் அடித்த ரோகித் சர்மா சிக்சர் விளாசுவதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் 6 பந்துகளை எதிர் கொண்ட இந்திய வீரர் ரோகித் சர்மா தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார், அவர் அடித்த ஒரு சிக்சர் மூலம் சர்வதேச அரங்கில் சிக்சர் மன்னனாக உலக சாதனை படைத்துள்ளார்.

அதாவது, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் 30 சிக்சர்களுக்கு மேல் விளாசிய முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

முன்னதாக நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம் தொடர்ந்து 4 ஆண்டுகள் இந்த சாதனையை படைத்திருந்தார்.

இந்த ஆண்டில் ரோகித் சர்மா மொத்தம் 30 சிக்சர்களை விளாசியுள்ள நிலையில், அதில் 29 சிக்சர்கள் ஒருநாள் போட்டியிலும், ஒரு சிக்சர் டி20 போட்டியிலும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்