ஜாம்பவான்களின் பட்டியலில் இடம் பிடித்த இலங்கை வீரர்!

Report Print Thayalan Thayalan in கிரிக்கெட்
387Shares
387Shares
lankasrimarket.com

டெஸ்ட் போட்டிகளில் 3000 ஓட்டங்களைக் கடந்த 12 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையினை கருணாரத்ன பெற்றுக்கொண்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது சிறப்பான, அதேவகையில் நிதானமான துடுப்பெடுத்தாட்டத்தின் மூலம் 196 ஓட்டங்களை கருணாரத்ன குவித்தார்.

குறித்த போட்டியில் 141 ஓட்டங்களை அவர் கடந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்களையும் அவர் கடந்துள்ளார்.

அதன் அடிப்படையில், இதுவரை டெஸ்ட் 44 போட்டிகளில் விளையாடிய கருணாரத்ன 3000 ஓட்டங்களைக் கடந்து சாதனை வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அணியினைப் பொறுத்தவரை ஜாம்பவான் குமார் சங்ககார மொத்தமாக 134 டெஸ்ட் போட்டிகளில் 12400 ஓட்டங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்